3 நோயாளிகள் மரணமடைந்த விவகாரம்: மருத்துவ கல்வி இயக்குநரிடம் அறிக்கை தாக்கல்

May 16, 2019 01:24 PM 95

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் மரணமடைந்த விவகாரம் குறித்து மருத்துவ கல்வி இயக்குநரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதுகுறித்து சர்ச்சை எழுந்ததால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த மூன்று நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தெளிவுப்படுத்தினர். இருப்பினும் 3 நோயாளிகள் மரணமடைந்தது குறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா தலைமையில் விசாரணை நடத்தினர். அதன் முழுமையான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா அனுப்பி வைத்துள்ளார்.

Comment

Successfully posted