சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த மூவர் கைது

Dec 31, 2019 12:18 PM 393

துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 45 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இவ்விரு நாடுகளிலிருந்தும் தங்கம் கடத்தி வந்த தாட்சாயிணி, ஹவகேலா, விஜயவீரா ஆகியோரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted