சேலம் அருகே இடி தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்

May 10, 2019 11:07 AM 322

சேலம் அருகே இடி தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்த போது, மன்னார்பாளையம் எம்.பாலப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சின்னதம்பி, மகன் கோகுல், மகள் மஞ்சுளா ஆகியோர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, பலத்த சத்தத்துடன் இடி விழுந்ததில், மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted