நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

Sep 22, 2020 05:50 PM 330

சேலம் அருகே பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில கூலித் தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கலியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது. அப்போது, அந்த வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, பேருந்தின் பின்பக்கம் மோதியது. அதில் பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted