பள்ளி செல்வதாக கூறி சென்ற 3 மாணவிகள் மாயம்

Jul 17, 2019 10:16 PM 83

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மூன்று இளம்பெண்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல்பாளையம் காவேரி பாலம் பகுதியை சேர்ந்த நடராஜ் மகள் பத்மபிரியா, மாதேஸ்வரன் மகள் சண்முகபிரியா, மாரிமுத்து மகள் சரண்யா. மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே தோழிகளாக பழகி வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் மாணவிகள் மழையில் நனைந்தவாரு வீடு திரும்பிய நிலையில் வீட்டில் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவிகள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு, பள்ளி செல்வதாக கூறி சென்றுள்ளனர். ஆனால் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 மாணவிகளையும் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted