வளரும் டாப் 10 இந்திய நகரங்கள் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்

Dec 06, 2018 05:49 PM 156

2035 ஆம் ஆண்டிற்குள் வேகமாக வளரும் டாப் 10 இந்திய நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் 3 இடங்களை பிடித்துள்ளன. ஆக்ஸ்போர்டின், தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 2018-ம் ஆண்டு முதல் 2035 ஆண்டுக்குள் வேகமாக வளரும் நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை முதலிடத்தில் சூரத்தும், 2ஆம் இடத்தில் ஆக்ராவும் உள்ளன. 3ஆம் இடத்தை பெங்களூரு, 4ஆம் இடத்தை ஐதராபாத், 5ஆம் இடத்தை நாக்பூர் நகரங்கள் பிடித்துள்ளன. 6 ஆம் இடத்தில் திருப்பூரும், 7 ஆம் இடத்தில் ராஜ்கோட்டும், 8 ஆம் இடத்தில் திருச்சியும் உள்ளன. 9 ஆம் இடத்தில் சென்னையும், 10 ஆவது இடத்தில் விஜயவாடாவும் உள்ளன.

Comment

Successfully posted