ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!

Nov 20, 2020 10:33 PM 842

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஓடையில் குளிக்கச் சென்று, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோட்டைப்பட்டியை சேர்ந்த கோபி, பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகியோர், பேமலையான் கோயில் அருகேயுள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

மூவரையும் தீயணைப்புதுறையினர் தேடி வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். இளைஞர்கள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது. விபரீதத்தை அறியாமல் குளிக்கச்சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted