கஜா புயல் பாதித்த வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 30 மருத்துவ குழுக்கள்

Nov 29, 2018 11:02 AM 175

கஜா புயல் பாதித்த வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 30 மருத்துவ குழுக்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவ குழு வாகனங்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

புயல் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொசு, ஈ ஒழிப்பு சாதனங்களுடன் மேலும் சுகாதார குழுக்கள் பணியை துவங்கியுள்ளனர்.

இது குறித்த பேட்டியளித்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புயல் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது , மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றார்.

Comment

Successfully posted