நாடு முழுவதும் உள்ள 301 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றம்

Aug 14, 2018 01:36 PM 543
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், 58 ரயில்களின் புறப்படும் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவும்,57 ரயில்களின் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 102 ரயில்களின் வரும் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவும், 84 ரயில்களின் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பும் வருமாறு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து பயணிகள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Comment

Successfully posted


Super User

நல்ல செய்தி