புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 372 பேருக்கு கொரோனா!

Sep 27, 2020 10:55 AM 495

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 372 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 26400 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 270 நபர்களுக்கும், காரைக்காலில் 72 நபர்களுக்கும், ஏனாமில் 11, நபர்களுக்கும் மாஹேவில் 19 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதில் 5239 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 20648 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்,புதுச்சேரியில் 10 நபர்களும், காரைக்காலில் 3 நபர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது..

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26400 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்..

Comment

Successfully posted