"கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3816 ரயில் பெட்டிகள் தயார்" - இந்தியன் ரயில்வே

Apr 25, 2021 02:09 PM 764

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 3 ஆயிரத்து 816 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தற்போது மகாராஷ்டிராவில் நந்தூர்பர் மாவட்டத்தில் 21 ரயில் பெட்டியில் 47 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று வாரணாசியில்10 ரயில் பெட்டிகளும், ஆனந்த் விகாரில் 10 ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மாநில அரசுகளின் கோரிக்கை ஏற்ப, ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றி வழங்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted