மே.தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பந்துவீச்சு

Dec 22, 2019 01:28 PM 669

கட்டாக்கில் இன்று நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்,  இந்திய அணி பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஒருநாள் தொடரை வெல்லும் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted

Super User

Super news