தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Jul 05, 2020 08:50 PM 619

தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 150 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 4 ஆயிரத்து 150 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 481 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 669 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 186 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 860 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 56 புள்ளி 48 சதவீதமாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 308 பேரும், செங்கல்பட்டில் 274 பேரும், திருவள்ளூரில் 209 பேரும், திருவண்ணாமலையில் 141 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted