4 மாநில சட்டமன்றத் தேர்தல்! இன்று முக்கிய முடிவு!

Sep 07, 2018 11:39 AM 181

தெலுங்கானா சட்டமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்டது. இதையடுத்து அது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் தெலுங்கானாவையும் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தேர்தல் ஆணையம் ஆராய உள்ளது. இதையடுத்து, தேர்தல் தொடர்பாக அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாநிலங்களில் வரும் ஜனவரியில் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comment

Successfully posted