4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Sep 04, 2018 02:58 PM 789

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்துப் பணிகள், விவசாயம் சார்ந்த பணிகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தேனி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சரோஜா, காமராஜ், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

Comment

Successfully posted