4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன்

Jul 16, 2018 11:11 AM 893

ரஷியாவில் நடைபெற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் - குரோஷியா அணிகள் பலபரிட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அதிரடியாக விளையாடி பிரான்ஸ் அணி, 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை, தன் வசப்படுத்தியது. இந்த வெற்றியை, பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு, பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனிடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு, பல்வேறு நாட்டு தலைவர்கள்  தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, அந்நாட்டு ரசிகர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரண்டு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted