பொள்ளாச்சி அருகே மான் வேட்டையாடிய 4 பேர் கைது

May 05, 2019 09:55 PM 419

பொள்ளாச்சி அருகே மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த கள்ள துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த செமணாம்பதி ,செம்மேடு வனப் பகுதிகளில், சிலர் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் செம்மேடு பாலகிருஷ்ணன், மாரப்பக் கவுண்டன்புதூர் தமிழரசன் மற்றும் துரைசாமி, பெரியபோதுவை சேர்ந்த சுந்தர்ராஜ், கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் மான்களை வேட்டையாடி வந்தது கண்டுபிடிக்கபட்டது.

அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, மான் கொம்பு, தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Comment

Successfully posted