பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை - 4 பேர் கைது!

Apr 24, 2021 09:52 AM 731

பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மத போதகர், சிறுமியின் சித்தி, சித்தப்பா உட்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல திரைப்பட பாடகி ஒருவர், தனது 15 வயது மகளுக்கு, தனது தங்கை, தங்கையின் கணவர், உறவினர் மற்றும் கிறிஸ்தவ மதப்போதகர் ஆகிய 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில், சிறுமியின் சித்தப்பா, உறவினர், மத போதகர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுப்பதை சிறுமியின் சித்தி அறிந்தும், அதனை தடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து 4 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் பாட்டி, சொத்து தகராறு காரணமாக மூத்த மகளான பின்னணி பாடகி, தனது இரண்டாவது மகளின் குடும்பத்தாரை பழிவாங்கி விட்டதாக குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted