4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Apr 24, 2019 06:03 AM 304

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் வரும் மே 19 ஆம் தேதி நடக்கவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகியத் தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சூலூரில் கோவை புறநகர் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை தலைவர் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார். அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றத்தில் அவனியாபுரம் பகுதி அதிமுக செயலாளர் எஸ்.முனியாண்டி போட்டியிடுகிறார். ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் பெ.மோகன் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் பெயர் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Comment

Successfully posted