தேக்கடியில் 4 சென்டி மீட்டர் மழை

May 24, 2019 06:42 PM 130

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வழக்கத்திற்கு அதிகமாக 1 முதல் 2 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தேனி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேக்கடியில் 4 சென்டி மீட்டர் மழையும், கூடலூர் பஜார் வீதியில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Comment

Successfully posted