வாகன சோதனையில் சிக்கிய 4 கிலோ கஞ்சா

Feb 12, 2019 10:52 AM 54

மதுரை மாவட்டம் அவனியாபுரம், வெள்ளக்கல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாண்டி, தங்க பெருமாள், முத்தையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Comment

Successfully posted