வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் - 4 பேர் கைது

Sep 28, 2020 11:55 AM 257

கோவை அருகே, இருச்சக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, கடந்த 15ம் தேதி நெகமம் பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர் வங்கிக் கணக்கில் இருந்து 2,94,000 ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ஜெய்கணேஷ் வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம கும்பல், வாகனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது.

இந்த நிலையில், உடுமலை சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருசக்கர வாகனங்களில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட ராஜா, விஜய், ஆறுமுகம், காட்டு ராஜா ஆகிய நான்கு பேரிடமிருந்து 9,84,000 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted