டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : மேலும் 4 பேரிடம் விசாரணை

Jan 27, 2020 12:37 PM 247

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி அதிகாரி, இடைத்தரகர், தேர்வுத்தாள் பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்கள் என மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தலைமறைவாக உள்ள சென்னை முகப்பேரை சேர்ந்த, இடைத்தரகர் ஜெயக்குமாரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ், நித்திஷ்குமார், மகாபலிபுரத்தை சேர்ந்த திருக்குமரன், ஆவடியை சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, இடைத்தரகராக செயல்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted