மதுரை அருகே 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு- மர்ம நபர்கள் கைவரிசை

Oct 15, 2018 06:36 AM 715

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரதவல்லப பெருமாள் சன்னிதி, குரு பகவான் சன்னிதி ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.

கோவில் அர்ச்சகர் ரெங்கநாத பட்டர் பூஜைக்காக கோவிலை திறந்தபோது கோவிலில் இருந்த வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு ஐம்பொன் சிலைகள் காணாமல் போயிருப்பது கண்டு திடுக்கிட்டார். 

இதையடுத்து அவர்,கோவில் சிலைகள் காணமல் போனது பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

மோப்ப நாய் பொற்கை வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஒடிவிட்டு நின்றது. இதற்கிடையே கோயிலில் பதிவாகியிருந்த CCTV கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் முகமுடி அணிந்து சிலைகளை எடுத்துச்செல்வது நன்றாக தெரிந்தது.

கொள்ளையர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted