4 முறை கருக்கலைப்பு செய்தேனா? சின்மயி பரபரப்பு விளக்கம்

Oct 15, 2018 02:53 PM 1208

4 முறை கருக்கலைப்பு செய்தேனா? சின்மயி பரபரப்பு விளக்கம்

பின்னணி பாடகி சுஜித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரைத்துறையில் நடந்த சில ரகசிய நிகழ்வுகளை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சுசி லீக்ஸ் என்ற பெயரில் அவர் வெளியிட்ட தகவலில் பின்னணி பாடகி சின்மயி 4 முறை கருக்கலைப்பு செய்தார் என்று ஒரு தகவலும் இடம்பெற்றது.

இந்நிலையில் அந்த டுவிட்டர் பதிவை, தேடி எடுத்த வைரமுத்து ஆதரவாளர்கள், சின்மயி மீது புதிய தாக்குதலை தொடுத்தனர். அவரை தகாத வார்த்தைகளாலும் திட்டி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு சின்மயி பதில் அளித்துள்ளார்.

பாடகி சுஜித்ரா மனநிலை சரியில்லாத நேரத்தில் அதுபோன்ற தகவலை வெளியிட்டதாக சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சுஜித்ராவின் கணவர் கார்த்திக் குமார் தனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள சின்மயி, அதில் தன் மீதான குற்றச்சாட்டிற்கு கார்த்திக் குமார் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.

அந்த மின்னஞ்சலை வெளியிட தனக்கு 2 நிமிடம் கூட ஆகாது என்றும் அது தேவையில்லை என விட்டுவிட்டதாகவும் சின்மயி, தனது முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted