40 கிலோ கஞ்சா பறிமுதல்!

Oct 14, 2018 01:26 PM 616

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கேரளாவில் இருந்து ஆழப்புலா விரைவு ரயில் அதிகாலை 1.10 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இதில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளை சோதனை செய்தபோது, அவற்றில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட பெட்டியில் வந்த பயணிகளின் விபரம், ஆலப்புழா ரயில் கடந்து வந்த ரயில் நிலையங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted