துபாயில் இருந்து வந்த 40 மதிக்கத்தக்க நபர் அறை ஒன்றில் அடைப்பு!!!

Mar 23, 2020 08:34 PM 1168

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் பகுதியில் துபாயில் இருந்து வந்த 40 மதிக்கத்தக்க நபர் அறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்ததால், அச்சடைந்த பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். பழனியப்பா நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேலுசாமியின் மகன் சத்தியசீலன், 40 வயதான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், மூளைபக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சத்தியசீலன், கடந்த 20ஆம் தேதி நாடு திரும்பினார். இதனால் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் தனிமையில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தனிமையில் உள்ளதாக விளக்கம் அளித்த அவர், அதற்கான சான்றிதழ்களையும் காண்பித்துள்ளார். இதனால் அச்சப்பட வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Comment

Successfully posted