41 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை: முதலமைச்சர்

Nov 19, 2019 04:46 PM 130

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தின் போது காலமான 41 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையாளமாக 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். அப்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வாரிசுதாரர்களுக்கு அவர்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted