சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 44வது புத்தக கண்காட்சி!

Feb 24, 2021 09:10 AM 2312

சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 44வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'யின் சார்பில், நடைபெறவுள்ள இக்கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தலைமை வகிக்கிறார்.

இன்றிலிருந்து மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை, தினமும் காலை 11 மணி முதல், இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. 700 அரங்குகளில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வாசகர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

Comment

Successfully posted