அதிமுகவின் 47 -வது ஆண்டு தொடக்க விழா - முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

Oct 17, 2018 06:26 AM 920

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.

அதிமுக தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவடைந்து, 47வது ஆண்டு இன்று தொடங்குகிறது.இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, அதிமுக கொடியினை ஏற்றி வைக்கின்றனர்.

தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவர்கள் இனிப்புகளை வழங்குகின்றனர்.

இதையடுத்து, கழகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த தொண்டர்களின் குடும்பங்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியையும் அவர்கள் வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

Comment

Successfully posted