விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் - மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Nov 16, 2018 12:47 PM 318

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் 4-வது நாளாக இன்றும் மீன் பிடிக்க செல்லவில்லை.

கஜா புயல் கரையை கடந்துள்ள நிலையில் விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதே போன்று மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளாக மரக்காணம் மற்றும் வானூர் ஆகிய இடங்களில் கஜா புயல் காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால், பொம்மையார் பாளையம், எக்கையர்குப்பம், கூனிமேடு குப்பம், கைப்பானிகுப்பம் , ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் படகுகள் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Comment

Successfully posted