உரிய ஆவணம் இல்லாததால் 5,60,000 ரூபாய் பறிமுதல்

Mar 16, 2019 07:15 AM 39

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த சூரியகாந்த் என்பவரின் காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி 5 லட்சத்து 60 ஆயிரம் பணமிருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விசாரணையில் பணம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமராவ் நகைக்கடை உரிமையாளர் உடையது என தெரியவந்தது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்பு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என பற்க்கும் படையினர் தெரிவித்தனர்.

Comment

Successfully posted