5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

Sep 15, 2018 03:20 PM 457

குல்காம் பகுதியில் அமைந்துள்ள சௌகம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்ததால், விடிய விடிய சண்டை நீடித்தது. இதில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட 5 பேரும் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இரு தரப்பினரிடையே நடந்த மோதலால் பாராமுல்லா - காஸிங்கட் பகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

Comment

Successfully posted