குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை - கம்பி எண்ணும் குடும்பம்

Oct 07, 2020 05:51 PM 1005

திருவண்ணாமலை அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே கொத்தந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்-மல்லிகா தம்பதியின் மகன் பிரசாந்த். இவர் தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த சைல்டு லைன் அலுவலர் அசோக்குமார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சிறுமியை திருமணம் செய்துகொண்ட பிரசாந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். மேலும், மாப்பிள்ளையின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய நான்கு பேரும் குழந்தைத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததால், அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comment

Successfully posted