5 கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் தயார்.!

Dec 29, 2020 09:06 AM 1225

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 கோடி தடுப்பு மருந்துகள் தயாராக உள்ளதாக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகியவையுடன் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கி வந்தது. தங்களின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளதாகவும், அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை வினியோகிக்கப்படும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மார்ச் மாதத்திற்குள் 10 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விரைவில் இங்கிலாந்தில் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும், இந்தியாவிலும் அடுத்த மாதத்தில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted