அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Jun 12, 2019 03:30 PM 89

அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக அரும்பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், இதேபோல் தேர்தல் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்திருப்பதுடன், இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா தலைமையில் பெற்ற வெற்றியை போன்ற மகத்தான வெற்றியை தமிழகத்தில் விரைவில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பெற்றிடவும், இதற்கான தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்கவும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அதிமுக, அதன் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் வகுத்து தந்த ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Comment

Successfully posted