கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளிகள் பலி

Apr 19, 2019 06:33 PM 119

திருவண்ணாமலை அருகே விவசாய கிணறு தூர்வாரும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில் கிணறு தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கிய வேலு, தணிகாசலம், பிச்சாண்டி, ரவிந்திரன் மற்றும் ஜெயமுருகன் ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்ததில் ஐவரும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். அனைவரும் பாறையில் விழுந்ததால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted