சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை!!!

May 26, 2020 06:01 PM 1225

சென்னையில், அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்த, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர், படப்பிடிப்புகளை நடத்த குறைந்தபட்சம் 50 கலைஞர்களுக்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தநிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பு உள்ளிட்டோர் செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்தனர். அப்போது, படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளித்தமைக்காக தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, குறைந்தபட்ச கோரிக்கையாக 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.

Comment

Successfully posted