கென்யாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 51 பேர் பலி

Oct 11, 2018 03:47 AM 448

கென்யாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து கிஷ்மு நோக்கி அதிகாலையில் 52 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கென்யா காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கென்யாவில் சராசரியாக ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர், சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment

Successfully posted