ஆக்ராவில் 4 நாட்களில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!!

Jul 06, 2020 10:04 AM 578

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நினைவுச்சின்னங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கட்டுப்பாடு தளர்வுகளின் ஒருபகுதியாக, அனைத்து நினைவுச்சின்னங்களும் இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, அக்பர் கல்லறை ஆகிய நினைவுச்சின்னங்கள் திறக்கப்படாது என ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted