இரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்!

Oct 17, 2020 05:08 PM 1935

திருச்சி ரயில் நிலையத்தில், 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் வெள்ளி கொலுசுகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனேஸ்வர் செல்லும், ஹவுரா விரைவு ரயிலில், ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த சக்திவேல், அரவிந்த் ஆகியோர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்களை ரயில்வே காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் பைகளில் இருந்து 57 கிலோ எடையுள்ள வெள்ளிக் கொலுசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் வரி செலுத்தாமல் வெள்ளிக் கொலுசுகளை எடுத்து வந்ததை ஒப்புக்கொண்ட அவர்களுக்கு, 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Comment

Successfully posted