டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்கள் கைது

Apr 27, 2021 12:40 PM 535

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை
கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் முருகன், கடந்த 13ஆம் தேதி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்மநபர்கள், அவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் என்ற சுருட்டைமணி, மதுரையை சேர்ந்த பரத் ஆகியோரை கைது செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை சமையநல்லூர் பகுதியை சேர்ந்த முத்து இருள் என்பவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் திருடிய பணத்தில் வாங்கிய இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Comment

Successfully posted