குடும்ப பிரச்சனை காரணமாக 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

Jan 07, 2020 08:55 PM 1216

திண்டிவனம் அருகே, கணவனுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக 6 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, பூதேரி வடக்கு தெருவை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும், குன்னம் கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவருக்கும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் திண்டிவனம் காவல் நிலையத்தில் பல முறை சமரசம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு விமல்ராஜ் அழைத்து செல்லாததால், அன்பரசி கடும் மன உளச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்து வந்த திண்டிவனம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்பரசி தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அளித்த புகாரின் அடிப்படையில், விமல்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comment

Successfully posted