குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் -பீதியில் கிராம மக்கள்

Nov 28, 2018 12:36 PM 323

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த 6 காட்டு யானைகள், வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

சின்னக்கல்லார் பகுதியில் புகுந்த 6 காட்டு யனைகள் வீடுகளை இடித்து சேதப்படித்தியது. இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாகின. யானை புகுந்தது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் வனத்துறையினர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வன விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், பாதுகாப்புக்காக வன அலுவலர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Comment

Successfully posted