சேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா

Feb 17, 2020 10:45 AM 192

சேலம் மாவட்டம் பொனம்பாளையத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு 60ம் ஆண்டு பொன் விழா சிறப்பாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் பொன்னம்பாளையத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 60ம் ஆண்டு பொன்விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்.தன்ராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் சங்ககிரி வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சாந்தாமணி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அசத்தலாக அமைந்தது. இதில் மாணவ, மாணவிகள் கராத்தே செய்து காண்பிக்கும் வகையில் ஓடுகளை உடைக்கும் காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

Comment

Successfully posted