மருத்துவக் கண்காணிப்பில் இருந்த 1,222பேரில் 617 பேருக்கு கொரோனா இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

Apr 10, 2020 02:09 PM 742

சென்னையில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ஆயிரத்து 222 பேரில், 617 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸை மூன்றாம் கட்டத்திற்கு நகர்த்த விடாமல் தடுக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையில், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்ட ஆயிரத்து 222 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ஆயிரத்து 222 பேருக்கும் 14 நாட்கள் கழித்து பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 617 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தொடர்ந்து வீட்டுக் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மீதமுள்ள 605 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted