644 தீவிரவாதிகள் இன்று காவல்துறையினரிடம் சரண்

Jan 23, 2020 09:01 PM 1032

அஸ்ஸாமில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் இன்று காவல்துறையினரிடம் சரணடைந்தனர்.

அஸ்ஸாமில் தனிநாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்து ஏராளமான ஆயுத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அண்டை நாடுகளில் முகாமிட்டு இயங்கி வரும் இந்த அமைப்புகள் இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு  எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். தங்களிடமிருந்த ஆயுதங்களையும் அவர்கள் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் சரணடைந்திருப்பது வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comment

Successfully posted