வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 650 கிலோ கஞ்சா பறிமுதல்

Feb 13, 2020 04:10 PM 564

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 650 கிலோ கஞ்சாவை தேசிய போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் கைப்பற்றினர்.

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு  கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது 310 பொட்டலங்களில் சுமார் 650 கிலோ மதிப்புள்ள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்த போதை தடுப்புபிரிவு காவல்துறையினர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டதுன், அவர்களிடமிருந்த 2 கார்களும் பறிமுதல் செய்யபட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted