சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க 668 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

Nov 29, 2018 03:25 PM 287

சென்னை மாநகர் முழுவதும் பொதுமக்கள் உதவியுடன் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதியதாக அமைக்கப்பட்ட 668 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 9.5 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகள் குறித்து சிசிடிவி மூலமே துப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.

 

Comment

Successfully posted