மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் 68.65% வருகைப் பதிவு!

Sep 26, 2020 05:58 PM 196

மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவை வருகைப் பதிவு 68.65% இருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்களவை நிகழ்வுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை 10 நாள் நடைபெற்ற மக்களவை கூட்டத் தொடரில், 8,700 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கொரோனா குறித்து 5 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில், 74 எம்.பி.,க்கள் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உறுப்பினர்களின் சராசரி வருகைப் பதிவு 68.65% ஆக இருந்தது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted